1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Updated : செவ்வாய், 15 ஜூன் 2021 (18:14 IST)

ரிஷபம்: ஆனி மாத ராசி பலன்கள் 2021

(கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை: ராசியில்  புதன், ராஹூ -  தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் -   தைரிய  ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் குரு (அதி. சா) என  கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
கொடுக்கும் வாக்கிறகு முக்கியத்துவம் அளிக்கும் ரிஷப ராசியினரே இந்த மாதம் எதிலும் அவசரப்படாமல் நிதானமாக முடிவு எடுப்பது நன்மை தரும்.  உடல்  ஆரோக்கியம்  ஏற்படும்.  மனதில் இருந்த குழப்பம், கவலை நீங்கும். தைரியம் உண்டாகும். வீடு மனை சம்பந்தமான காரியங்கள் அனுகூலம் தரும். 
 
தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் செலவும் அதிகரிக்கும். புதிய ஆர்டர்கள் பெறுவதற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டி இருக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் தயக்கத்துடன் தங்களது பணிகளை செய்ய வேண்டி இருக்கும். எந்திரங்களை இயக்குபவர்கள் கவனமாக இருப்பது நல்லது.
 
குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த  கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகளிடம் கவனமாக  பேசுவது  நல்லது.   உறவினர்கள் வருகை இருக்கும். சொத்துக்கள் வாங்க எடுக்கும் முயற்சிகள் தாமதப்படும். அக்கம்பக்கத்தினரிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் அகலும்.
 
பெண்களுக்கு எடுத்த முடிவை நிறைவேற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தாமதப்படும். மாணவர்களுக்கு  கல்வியில் வெற்றி  பெற மிகவும் கவனமாக பாடங்களை படிப்பீர்கள்.மனகுழப்பம் நீங்கி தெளிவான சிந்தனை மேலோங்கும். 
 
கலைத்துறையினருக்கு சில அத்தியாவசிய தேவைகளுக்கு செலவு செய்ய பணப்பற்றாக் குறையை சந்திக்கலாம். சனி சஞ்சாரத்தால் ஒரு பிரச்சினை முடிந்ததும்  இன்னொரு பிரச்சினை உருவாகலாம். 
 
சூரியன் சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் அரசியல் துறையினருக்கு எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும். சில காரியங்களில் தாமதமாக வெற்றி  ஏற்படும். உங்கள் விடாமுயற்சிதான் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். பழகும் நண்பர்களை எடைபோட முடியாது. 
 
கார்த்திகை:
இந்த மாதம் கடந்தகாலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பிவந்து சேர்வார்கள். உறவு பலப்படும். தொலைபேசித் தொடர்பு மூலமாக சிலர் புதிய தொழில்  ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. சுபநிகழ்ச்சிகள் இடம்பெறும்.
 
ரோகினி:
இந்த மாதம் சில அத்தியாவசிய தேவைகளுக்கு செலவு செய்ய பணப்பற்றாக் குறையை சந்திக்கலாம். ஒரு பிரச்சினை முடிந்ததும் இன்னொரு பிரச்சினை  உருவாகலாம். ஆனாலும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் பிரச்சினைகள் எவ்வளவு இருந்தாலும் தோல்வியும் தொய்வும் இல்லாமல் சமாளித்து ஜெயிக்கலாம்.
 
மிருகசீரிஷம்:
இந்த மாதம் எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும். சில காரியங்களில் தாமதமாக வெற்றி ஏற்படும். உங்கள் விடாமுயற்சிதான் உங்களுக்கு வெற்றியைத்  தேடித்தரும். பழகும் நண்பர்களை எடைபோட முடியாது. வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பும் உங்கள் பெருந்தன்மையை கொஞ்சம் ஒதுக்கி வைக்கவும்.
 
பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று அம்மனுக்கு அர்ச்சனை செய்து வணங்க கஷ்டங்கள் நீங்கி சுகம் உண்டாகும். வாழ்க்கை வளம் பெறும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: ஜூன்: 25, 26
அதிர்ஷ்ட தினங்கள்: ஜூன்: 18, 19; ஜூலை: 16.